Thursday, August 17, 2023

துணிந்தபி்ன் எண்ணுதல் இழுக்கு



 துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு!


குப்பை உணவென்பார் எங்கெங்கும் விற்பார்கள்!

இந்த மருந்தெல்லாம் நல்லதென்பார்! பின்னரிங்கே

இந்த மருந்தெல்லாம் நல்லதல்ல என்றுசொல்வார்!

கைபேசி பேசென்பார்! புற்றுநோய் எச்சரிக்கை

தந்தேதான் பேசாதே என்பார்! விளையாடு

என்பார்! சிலநாளில் உன்னுடல் பாதிக்கும்!

என்றேதான் எச்சரிப்பார்! இப்படித்தான் மக்களின்

அன்றாட வாழ்க்கையில்  தும்பைவிட்டு வால்பிடித்தல்

என்ன மனநிலையோ கூறு?


மதுரை பாபாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home