Tuesday, October 10, 2023

கவிதாயினி ரம்யா நாராயணன்


 பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத்திருநாள்: 11.10.23

செல்லத் தாத்தா கவிஞர் பாபாராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து.

இன்று உங்கள் பிறந்தநாள்!

இன்பம் பொங்கும் சிறந்தநாள்!

அன்னை தந்தை ஆசானை

வணங்கி வாழ்தல் நல்லது! என்று வாழ்ந்து காட்டும் வழிகாட்டி!!

நன்றாய் படித்தே முன்னேறி

நாளும் உழைத்தே முன்னேறி!!

நாளும்

நல்வாழ்வை வாழ நல்மொழி கூறி 

நல்குகின்றார்!! 

திறமை உனது செல்வந்தான்

அதனை வளர்த்து முன்னேறு! என்று திறன்பட தினமும் திகழ்கின்றார்!!

நண்பர்கள் சூழ்ந்தே வாழ்த்துகின்றோம்!

உறவினர் சூழ்ந்து வாழ்த்துகின்றோம்!!

வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கி மகிழும் செல்லங்கள்🙏🏻😍

என்ன மொழிகள் படித்தாலும்

தமிழில் உணர்வு பெறுவாயே!

என்று தமிழை உயிராய் கொண்டவர்தான்!!

குறளைப் போற்றி வாழ்கவே!

குவலயம் போற்ற வாழ்கவே! என்று நாளும் குறள் வழி வாழ்வமைத்து வளமோடு வாழ்கின்றார்!!

மக்கள் பேரன் பேத்தி எல்லோரும்

வாழ்த்துப் பாதான் பாடுகின்றோம்!

வாழ்க வாழ்க பல்லாண்டு.

தமிழ்போல்  வாழ்க பல்லாண்டு

வணங்கும் இதயங்கள்:

நாராயணன்

ரம்யா

திவ்யஶ்ரீ

குடும்பத்தார்😍🙏🏻


அருமை அருமை மகளின் வாழ்த்துப்பாவில் மகிழ்கின்றேன். இதை எனது blogல் சேமித்துவைத்துள்ளேன்.

கவிதாயினி ரம்யா நாராயணனுக்கு நன்றி

0 Comments:

Post a Comment

<< Home