தீபாவளி துணிவாங்கும் படலம்
திரு.அன்பு செல்வன்
மதுரை நினைவுகள்!
DEEPAVALI PURCHASE AT MADURAI MILLS COOP STORES-- PONNAGARAM
மதுரை மில் கூட்டுறவு பண்டக சாலை,பொன்னகரம் மதுரை.
தீபாவளிக்குத் துணிவாங்குதல்!
1960 களில் மலரும் நினைவுகள்!
மதுரைமில் கூட்டுறவு பண்டகசாலைக் குள்ளே
குடும்பமாகச் செல்வோம் துணிமணிகள் வாங்க!
எடுப்போம் பிரிப்போம் அடுக்குவோம் மூட்டை!
படுநீள மாக தொகைப்பட் டியலைக்
கொடுப்பார் வருவோம் மகிழ்ந்து.
ஒவ்வொரு ஆடைப் பிரிவுக்குள் சென்றேதான்
உள்ளம் விரும்புவதை வாங்கி முடிப்பதற்குள்
தள்ளுமுள்ளு கூட்டத்தில் நீந்தி வெளிவருவோம்!
எல்லோர்க்கும் தீபா வளிக்கு துணிகளை
மில்ஸ்டோரில் வாங்குவோம் சென்று.
என்தந்தை தாயுடன் நான்கு குழந்தைகள்
என்றேதான் செல்வோம்! எடுத்துக் கொடுத்துவிட்டு
என்தந்தை மீண்டும் அலுவலகம் சென்றிடுவார்!
ஒன்றாய் நரவண்டி ஏறித்தான் வீட்டுக்கு
வந்துசேர்வோம் நாங்கள் மகிழ்ந்து.
சித்தப்பா வீட்டாரும் மாமாவின் வீட்டாரும்
அக்கறையாய் வந்தேதான் பார்ப்பார் துணிகளை!
இப்படியே நாங்களும் அங்குசென்று பார்த்திருப்போம்!
உற்றார் உறவினர் கூட்டுறவு வாழ்விது!
இப்போது கானல்நீர்தான் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home