சங்கத்தமிழ்க் கவிதைப் போட்டி
சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா!
கவிதைப்போட்டி! 20.12.23
நாவினால் சுட்ட வடு!
பண்படுத்தும் சொற்களை விட்டுவிட்டு
உள்ளத்தைப்
புண்படுத்தும் சொற்களைக் கட்டவிழ்க்கும் வக்கிரம்
என்றும் வடுவாக மாறிவிடும் ஆறாது!
பண்படுத்தும் சொற்களைப் பேசு.
கனிவான சொற்களைக் கையாள வேண்டும்!
பணிவாகப் பேசிப் பழகத்தான் வேண்டும்!
மனதை ரணப்படுத்தும் போக்கினை விட்டே
தினமும் நளினமாகப் பேசு.
சொல்லுக்குச் சொல்லிங்கே வம்புகளைப் பேசுகின்ற
எல்லைகள் தாண்டுகின்ற தீவிர வாதத்தால்
தொல்லைகள் உண்டாகும்! உள்ளம் உளைச்சலென்னும்
அல்லலுக்கே ஆளாகும் செப்பு.
குறள்கூறும் நல்ல அறிவுரையைப் போற்றிச்
சிறப்பாக வாழ்ந்திருந்தால் புண்பட்டு வாழும்
குறையின்றி வாழலாம் கூறு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home