Tuesday, January 02, 2024

மிதிவண்டிப் பழக்கம் அன்றும் இன்றும்



 மிதிவண்டிப் பழக்கம் அன்றும் இன்றும்!


வீட்டுக்கு வீடு மிதிவண்டி வைத்தேதான்

நாட்டில் வலம்வந்தே வாழ்ந்தோம்! உடற்பயிற்சி

ஆட்டிப் படைக்க நலமுடன் வாழ்ந்திருந்தோம்!

காட்சி அருமைதான் அன்று!


அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு உந்துகளில்

நம்பழக்கம் தொற்றிப் பரவியதால் நாள்தோறும் 

கண்டகண்ட நோய்கள் வலிகளென்று மேனியிலே

அங்கங்கே தாக்க உடற்பயிற்சிக் கூடத்தில்

புன்னகை யோடுநாம் சென்றேதான் நின்றிருக்கும்

சின்ன மிதிவண்டி தன்னைத்தான் ஓட்டுகிறோம்

இன்று மணிக்கணக்கில் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home