குறளும் சாப்பாடும்
குறளும் சாப்பாடும்!
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
சாப்பாடு-- இன்றைய நடைமுறை!
வீட்டில் சமைத்துவைத்த சாப்பாடை விட்டுவிட்டு
நாட்டில் கடைகளைத் தேடித்தான் சாப்பிடும்
காட்சி நடைமுறை வாழ்விலே பார்க்கின்றோம்!
காத்திருக்கும் பெற்றோரைக் காண்.
கண்டகண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிட்டுத்
திக்குமுக் காடுகின்றார் சீரணம் ஆகாமல்!
இந்தநிலை தேவையா? நேரத்தில் சாப்பிட்டு
மந்தநிலை தன்னைத் தவிர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home