நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நம்பிக்கை ஒன்றுதான் உற்சாகம் ஊக்கத்தை
என்றும் உயர்த்திப் பிடிக்கும் அருமருந்தாம்!
உங்கள் முயற்சியால் அந்த நிலைவர
இங்கே வடிவமைக்கக் கூடும்! செயல்பட
மட்டும் உதவவில்லை! நல்ல மகிழ்ச்சியான
சுற்றுச்சூ ழல்தன்னை நாளும் உருவாக்கும்!
நம்பிக்கை ஒன்றே துணை.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home