Monday, December 02, 2024

துக்கம் அடைத்தது!

 துக்கம் அடைத்தது!

(சூழ்நிலைக் கவிதை)

சிகரமோ தொட்டுவிடும் தூரத்தில் என்றே

முகம்மலர்ந்த நேரம் மலைசரிந்து வீழ்ந்தேன்!

சிகரத்தை எட்டாத தூரத்தில் பார்த்தேன்!

முகத்தில் அகத்தில்  களையிழந்தேன்! துக்கம்

அடைத்தது நெஞ்சைப் பிழிந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home