Monday, January 06, 2025

வள்ளுவர்- வீரத்துறவி விவேகானந்தர்

 பொதுமுறை வள்ளுவர் -- வீரத்துறவி விவேகானந்தர்!

இணைப்பது கண்ணாடிப்பாலம்!


வள்ளுவர் சிலை வெள்ளிவிழா!


நாள் 31.12.24


பொதுமுறை கூறிய வள்ளுவரை வீரத்

துறவி விவேகானந் தர்மண்ட பத்தை

இணைக்கின்ற வண்ணத்தில் கண்ணாடிப் பாலம்

அமைத்ததை வாழ்த்துவோம் சூழ்ந்து.

கண்ணாடி போலத் தெளிவாக வாழ்வியலை

வள்ளுவம் தந்ததால் கண்ணாடிப் பாலத்தை

முக்கடல் சங்கமத்தின் மீது  குமரியிலே

அற்புதமாய் மாண்புமிகு ஸ்டாலினின் ஆட்சியில் 

மக்கள் பயனுற செய்திட்டார் வாழ்த்துவோம்!

நற்றமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home