பாசம் கீழ்நோக்கித்தான் போகும்
பாசம் கீழ்நோக்கித்தான் போகும்!
அம்மாவும் அப்பாவும் தங்களது வாழ்நாளைக்
கண்ணுங் கருத்துமாய்ப் பிள்ளை வளர்ப்பிலே
அன்றாடம் காட்டுவார்! பெற்றோர் முதியவராய்
இங்கேதான் ஆனாலும் மாறமாட்டார்! பிள்ளைகள்
தங்கள் சிறகை விரித்தே பறந்திருப்பார்!
பெற்றோரைப் பிள்ளைகள் இப்படிப் பார்ப்பாரா?
எப்போதும் பாசமோ கீழ்நோக்கித் தான்போகும்!
இப்படித்தான் வாழையடி வாழையாய் வாழ்கிறோம்
நற்றமிழே! வாழ்க்கையில் நாம்.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home