Wednesday, July 23, 2025

மதுரைப் பெண்ணே விலகு

 விலகு! மதுரைப் பெண்ணே விலகு!

என்னை வளர்த்த மதுரையே! பெண்ணொருத்திப்

புண்படுத்திப் பார்க்கின்றாள்! தப்பாட்டம் ஆடுகின்றாள்!

என்குடும்பம் புண்பட்டு நின்றே தவிக்கிறதே! 

மன்றாடி வாழ்கிறேன் நல்லதீர்ப்பைச் சொல்லம்மா!

பெண்ணோ விலகநீ ஆணையிடு! என்மகனை

எங்கள் குடும்பத்தில் சேர்த்துவிடு! மதுரைவாழ்

பெண்ணை உடனே விலக்கு.


இருமனப்பெண்!


மகன்மீதும் தப்பே! இருமனப் பெண்ணின்

நடத்தையும் தப்பே! இருவரும் தப்பால்

தடம்மாறும் போக்கைக் கைவிட்டு விட்டு

விலகவேண்டும்! மைந்தன் மனைவியுடன் வாழும்

நிலைவர வேண்டும் உணர்.


மருமகள் சத்யாவின் கூட்டைப் பிரிக்கும்

செருக்குடைய ஆணவக் காரியின் ஆட்டம்

உருக்குலைந்து போகவேண்டும்! மீண்டுமிங்கே கூட்டில்

மருமகள்  மைந்தனுடன் பேரன்கள் கூடி

பெருமையுடன் வாழவேண்டும் செப்பு.


என்முன்னே எந்தன் குடும்பத்தைச் சீரழிக்கும்

பெண்ணே! விலகியே சென்றுவிடு நீயாக!

துன்பம் கொடுத்தால் துயரப் படுவாய்நீ!

இன்றே விலகிடு நீ.


படுத்துவதும் போதும்! படுத்தியதும் போதும்!

கெடுமதி கொண்டவளே! விட்டு விலகு!

உறுத்தவில்லை உந்தன் மனசாட்சி நாளும்?

உடனடி யாக விலகு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home