இனியவை நாற்பது வாழ்த்துப்பா
இனியவை நாற்பது வாழ்த்துப்பா!
இனியவை நாற்பதை
இன்பப்பா ஆக்கிய
கனிவான கவிஞர்
மதுரை பாபாராஜ்
கருத்தான நாற்பதை
கவின்மிகு நடையில்
பொருளின் மேன்மையை
பொருந்தக் கூறினார்
இன்றைய தலைமுறை
இனிதேப் படிக்க
வென்றிடும் தமிழில்
பயன் செய்தார்
வாழ்க அவர்தம் பணி
வளர்க அவர்தம் முயற்சி
கவிஞர் கா. செல்வராசு
கேளம்பாக்கம்
வள்ளுவர் குரல் குடும்பம்
மிக்க நன்றி
அருமையான கவிதை.
செந்தமிழ்ப் பாதந்த செல்வராசு பாவலர்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home