Saturday, December 20, 2025

குறள்நெறி வாழ்ந்தால் சிறப்பு

 குறள்நெறி வாழ்ந்தால் சிறப்பு!

இப்பாலா? அப்பாலா? எப்பால்

 இருந்தாலும்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

 வள்ளுவரின்

முப்பாலே வாழ்வியலைப் போற்றும்

 பொதுமுறையைத்

தப்பாமல் காட்டும் அறம்.


அறத்துப்பால்  சர்க்கரைப் பொங்கல்!

 பொருட்பால்

அகமினிக்க உண்ணும் கரும்புதான்!

 இன்பம்

முகம்மலரத் தோன்றும் மகிழ்ச்சிதான்!

 முப்பால்

அகந்தோறும் பொங்கட்டும் இங்கு.


அகரம் தொடக்கம்! னகரம் நிறைவு!

அகவுணர்வு மற்றும் புறவுணர் வைத்தான்

மகத்தாக மையக் கருத்தாக்கி இங்கே

சிறப்பாக வாழ்வியலைத் தந்தார் உவந்து!

குறள்நெறி வாழ்ந்தால் சிறப்பு.


உலகப் பொதுமுறை வள்ளுவம் என்றே

விளங்கிடு மாறு உலகமக்கள் எல்லாம்

உளம்மகிழ வாழ்க்கை நெறிகள்

 அளித்தார்.

வளமுடன் வாழலாம் வாழ்வு.


மதுரை பாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home