Monday, February 09, 2026

பாட்டி

 கம்பூன்றி தெருவைக் கடக்கும் பாட்டி!

கம்பைத்தான் ஊன்றி நடந்தே தெருவைத்தான்

நம்பிக்கை கொண்டே கடப்பதைக் கண்டேன்நான்!

அம்மம்மா! தள்ளாடும் இந்த வயதிலே

என்ன துணிச்சலோ? சொல்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


An old granny crossing the street, leaning on a stick

Leaning on her staff, she crossed the road,

Trust alone her steady foothold showed.

Oh, grandma! At this wavering age so frail,

What courage is this—tell me, tell!

— Madurai Babaraj

பம்பரமாய் சுழன்று அம்பாக பாய்ந்து வெம்பாமல் தெம்பாய் பெரிய கொம்பாய் குடும்பத்தை நடத்தியது அன்று அருந்திய கம்பங்கூழ்... உடம்பை பாழாக்காமல் வைத்தாலும், பதுமை மாறிய முதுமை இன்று கம்பை துணை தேடியதோ...

Col Krishnamoorthy

0 Comments:

Post a Comment

<< Home