Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 31

 குழந்தைகளுக்கு குறளமுதம் 31

குறள் 31

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

 ஆர்வலர்

புண்கணீர் பூசல் தரும்.(71)


அம்மா நேற்று ஆசிரியை

பணியில் இருந்தே நிறைவுபெற்றார்!


வழிய னுப்புக் கூட்டத்தில்

நாங்கள் கூடி நின்றிருந்தோம்!


அவரோ நல்ல  ஆசிரியை

நாளை இருந்தே வரமாட்டார்!


அன்பைப் பொழிந்தே பாடத்தை

அருமை யாக நடத்துபவர்!


இந்த ஏக்கம் தாக்கியதும்

நாங்கள் அனைவரும் அழுதுவிட்டோம்!


அன்பை அடைக்கும் தாழில்லை

கண்ணீர் அதனை வெளிப்படுத்தும்!


வள்ளுவர் தாத்தா சொன்னதோ

உண்மை அம்மா பொய்யில்லை!


இன்னும் நெஞ்சைப் பிசைகிறதே!

அன்பின் வலிமை இதுதானோ?


0 Comments:

Post a Comment

<< Home