Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 38

 குழந்தைகளுக்கு குறளமுதம் 38

குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை

 வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.


பாலை வனத்தில் ஏனம்மா

பசுமை மரங்கள் வளர்வதில்லை?


பாலை வனத்தில் நீரில்லை!

நீரில் லாத நிலத்தினிலே


பட்ட மரங்கள் தழைப்பதில்லை?

அதுபோல் உலக வாழ்க்கையிலே


அன்பே இல்லா நிலையிருந்தால்

பாலை வனம்போல் வெறுமைதான்!


அன்பே வாழ்வின் உயிரோட்டம்!

அன்பை வளர்க்கக் கற்றுக்கொள்!


0 Comments:

Post a Comment

<< Home