Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 33

 குழந்தைகளுக்கு குறளமுதம் 33

குறள் 33

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போ டியைந்த தொடர்பு.(73)


அன்பு என்றால் என்னம்மா?

எங்கே கிடைக்கும் சொல்லம்மா?


கடையில் விற்கும் பொருளல்ல!

கனிந்தே கலக்கும் உறவாகும்!


அம்மா அப்பா உன்மீது

பாசம் பொழிந்தால் அன்பாகும்!


கொஞ்சிப் பேசிப் பழகுவதால்

உணரும் நிலையே அன்பாகும்!


செல்லக் கோபம் அன்பாகும்!

மறந்தே சிரித்தால் அன்பாகும்!


நேர்மறை எண்ணம் அன்பாகும்!

எதிர்மறை எண்ணம் வம்பாகும்!


உடலும் உயிரும் இணைவதுபோல்

அன்பும் வாழ்வும் இணைந்திருக்கும்!


அன்பே இல்லா வாழ்வெல்லாம்

உயிரே இல்லா உடம்பாகும்!


சுட்டே எரிக்கும் பாலையாகும்!

அன்பு தழைத்தால் சோலையாகும்.!





0 Comments:

Post a Comment

<< Home