Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 39

 குழந்தைகளுக்கு குறளமுதம் 39

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்

 யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கு.


அப்பா அப்பா குறளுக்கு

உரிய பொருளைக் கூறப்பா!


அப்பா அப்பா அங்கேபார்!

அழகான மாமா பார்!


ஆடை எல்லாம் அழகுபார்!

அந்தப் பாப்பா அவர்குழந்தை!


பள்ளிக் கருகில் வந்ததுமே

குழந்தை சாக்லேட் கையாலே


அவரை அழுக்கு செஞ்சதால்

அன்பே இன்றி அடிக்கின்றார்!


பாவம் அந்தப் பாப்பாவோ

அழுது கொண்டே போகுதே!


உள்ளத் தன்பே அழகாகும்!

அந்த அழகே இல்லாமல்


வெளியில் உள்ள உறுப்புகள்

அழகாய் இருந்து என்னபயன்?


இதுதான் இந்தக் குறளுக்கு

உண்மைப் பொருளாம் கேட்டுக்கோ!



0 Comments:

Post a Comment

<< Home