முனைவர் மோகனராசு ஐயா
முனைவர் குறளறிஞர் மோகனராசு ஐயா அவர்களுக்கு வாழ்த்து!
எங்கேயும் குறள்! எதிலும் குறள்!
ஐயாவின் இல்லம் நுழைந்ததும் வள்ளுவரும்
ஐயாவின் தெய்வத் திருமனைவி அங்கேயோ
கூடத்தில் நம்மை வரவேற்க உள்நுழைவோம்!
ஈடற்ற வள்ளுவத்தைப் போற்று
தளங்கள் முழுவதும் தானிங்கே சேர்த்த
பலவகை யான திருக்குறள் நூல்கள்
அடுக்கிவைத்த வண்ணம் இருந்தன கண்டேன்!
இமாலய சாதனை தான்.
ஐயாவின் உள்ளறையில் கண்டேன் கணினியை!
ஐயாவே அந்தக் கணினிப் பணிசெய்யும்
தொய்வற்ற நல்லுழைப்பில் அங்கே உருவாகும்
பொய்யா மொழிப்புலவர் தந்த குறளுக்கு
நல்ல உரைகள் கவிதைகள் என்றேதான்
எங்கெங்கோ உள்ளவர்கள் நூலைத் தொகுத்துவைத்த
பண்பான தொண்டுகளை வாழ்த்து!
முனைவரையா மோகன ராசு உலகில்
தனக்குவமை யில்லாத சான்றோராய் வாழும்
இணையற்ற வள்ளுவப் பேரறிஞர் என்றே
வணங்குகிறேன் வாழியவே நீடு.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home