குறள்சிலம்பு
குறள்சிலம்பு
அரசனின் கட்டளையைச் சொல்லி சிலம்பைத்
தரச்சொன்னான் பொற்கொல்லன் தான்.
காவலரை அங்கே மறைவிடத்தில்
வைத்தேதான்
கோவலன் தந்த சிலம்பு
அரசியின் சிலம்பினை ஒத்ததென்று சொல்லி
தளமமைத்தான் கள்வனிவன் என்று
கோவலனின் தோற்றம் திருடனாகத் தோன்றவில்லை!
காவலர்கள் சொன்னார்கள் பார்த்து.
கள்ளமனக் கொல்லன் களவுநூல் காரணத்தை
அள்ளித் தெளித்தான் வலிந்து.
பலவாறாய்க் காரணங்கள் சொல்லி மனதைக்
கரைத்துவிட்டான் காவலரை வென்று.
கொல்லப்பட்டான் கோவலன்!
காவலருள் கள்குடியன் கோவலனை வெட்டினான்!
கோவலன் மாண்டான் வீழ்ந்து.
செங்கோல் வளைய,கொலையானான் கோவலன்
முன்செய்த தீவினை தான்.
குரவைக்கூத்து
மாதரி தீமை நிமித்தங்கள் பாரத்தாள்!
மாதர்கள் ஆடினார் கூத்து.
தீய நிமித்தங்கள்-- மாதரியின் மயக்கம்!
அரண்மனையில் இன்றுநம் நெய்ம்முறை! ஐயை!
அழைத்தாள் மாதரி அங்கு!
மத்து,கயிறை எடுத்தேதான் தாழியிடம்
அக்கறையாய் வந்தாள் விழைந்து.
தாழிகளில் பாலிங்கே தோயவில்லை! காளையின்
கூர்விழியில் கண்ணீரைப் பார்.
வெண்ணெய் உருக்கினாலும் இங்கே உருகவில்லை!
என்ன வருமோ நமக்கு!
ஆடுகளின் குட்டிகள் துள்ளியாட வில்லை!
வாடுவதால் தீங்கே நமக்கு.
பசுக்கள் அலற, மணியறுந்து வீழ
நடுக்கம்
அடுத்தடுத்து என்செய்வேன் நான்?
கறவைப் பசுக்களும் கன்றுகளும்
துள்ள
குரவைக்கூத் தாடுவோம் வா!
கூத்தை முடித்தே அரசனுக்கு வெற்றிகள்
ஊற்றெடுக்க வாழ்த்தினர் நின்று.
துயரச்செய்தி!
குரவை முடிந்ததும் நீராட வைகைக்
கரைசென்றாள் மாதரி தான்.
எங்கிருந்தோ வந்தவள் சொல்கேட்டாள்! மாதரி!
சொன்னதைச் சொல்லத் துடித்து
விரைந்தாள் இடம்நோக்கி மா திரிதான்! சென்றாள்!
உரைக்காமல் நின்றாள் திகைத்து.
கண்ணகி ஐயையை நோக்கியே கோவலன்
இன்னும் வரவில்லை யே?
கணவனைக் காணாது நானோ கலங்கும்
மனங்கொண்டேன்! என்னசொன்னார்? சொல்!
பொங்கிய கண்ணகி
அரசிச் சிலம்பைத் திருடிய கள்வன்
இவனெனக் கோவலனைக் கொன்று
வினைமுடித்தார் காவலர்கள்! என்றாள்! உடனே
அனலானாள் கண்ணகி தான்.
நிலத்திலே வீழ்ந்தாள்! எங்குள்ளீர்? என்றே
கலங்கி மயங்கினாள் காண்.

0 Comments:
Post a Comment
<< Home