வசந்தா கவிதைகள்
வசந்தா கவிதைகள்
இளம்பிறை!
14.01.75
அமுதம் எனும் அழகிய நிலவே!
உன் அழகிய திருமுகம் நினைத்தேன்!
சிறுகுழவி சீரடி எடுத்துவந்து அழகெல்லாம்
கொட்டிக் கிடக்க துள்ளி வந்தது போன்று
அழகிய இளம்முகத்தை காட்ட
என் அகமும் முகமும் மலர இன்பம் அடைந்தேன்!
என்று உன் இன்முகம் முழுதும்
வருமோ? இன்னும் எத்தனை நாட்களோ?
உன் முழுமுகம் காட்டி விரைவில் வருகவே!
அதுவரை எங்கிருந் தாலும் வாழ்க!
என்னை மகிழ்விக்க திருமுகம் காட்டி
அருள் முகத்துடன் அழகு முகமும் காட்டி
என்னுடன் கலந்திட விரைவில் வாராயோ?
எழுதிய நாள்:18.2.75
என் இனியன் வசந்தன் தன் உள்ளம் வெண்கமலம்!
என் வசந்தன் கவிதைகளை இனிமையுடன்
நான் படித்து நெஞ்சம் கிறுகிறுத்தேன்!
தேன்கலந்து தந்தாளோ? தெள்ளமுதைத் தந்தாளோ?
ஊன்மறந்தேன் எனைவாட்டும்
துயர்மறந்தேன்!
இன்பவானில் சிறகடித்துப் பறக்கின்றேன் நான்!
உனைப்போல் கவிதை மனம் எனக்கில்லை!
இருந்தாலும் முயலுகிறேன் நானும்
பாட்டெழுத!
என்ன எழுதுவேன் எதை உரைப்பேன்!
எனதன்பு தனையா?
இதயத் துடிப்பினையா?
சொற்களைத் தேடுகிறேன்!
சொல்லத் துடிக்கிறேன்,!
பேதை மனமன்றோ! மிஞ்சுவது தடுமாற்றம்!
உனதன்பைப் பெறும்தகுதி எனக்கில்லை இதுஉண்மை!
எனநினைத்து என்னுள்ளம்
நாணு கின்றேன்!
வெண்கமலம் உன்னுள்ளம் இவ்வுள்ளம் கலங்காமல்
இக்கமலம் இருந்திடுவேன்
என்றும்நீ வாழ்க!
என் இன்பக்கனவு வசந்தனுக்கு
அன்பு இதழ்விரிக்கும் தாமரை!

0 Comments:
Post a Comment
<< Home