வசந்தா கவிதைகள்
வசந்தா கவிதைகள்
மங்கையின் எண்ணம்
வான்முகிலின் வழங்கலைப் போல வாழ்க்கையின் வசந்தங்கள்
வாழ்வெனும் தீபமேற்ற
தஞ்சையெனும் தரணிநின்று
தன்துணைக் காண தவிப்புடனே
வந்தவளை மானை
தன்மனங் கொண்ட அரசன் மனமெனும்
கையினால் மானசீகமாக மாண்புடனே வரவேற்றான்!
களிப்புடனே நங்கையும்
ராஜாவைக் காண,
இன்பவானில் எழில்எண்ணம் சிறகடித்துப் பறக்கவே
இனியவள் வாழ்வில் இன்பங்கள் குவியவே!
இன்பச்சோலை!
சித்திர மண்டபத்தில் சிறகடித்து வண்டிசைக்க
தென்றல் வீசும் சோலையில் வசந்த
காலத்தில் காண்பவை எல்லாம் இனிமையாக
இதயக்கமலத்தில் நிறையும் மல்லிகையின் மணமும்
தஞ்சை எனும் தரணியில் காண பாட்டெழுத
நோட்டம் வரும்; ஏடெடுக்க எண்ணம் பிறந்தது!
கலைமகளுடன் தனமகளும் நிறைந்து வழியும்
இத்திருநகரில் வாழ்க்கைச் செல்வம்
இன்பச்சோலையே!
எழுதிய நாள் 12.1.75 அமாவாசை!
அழகு மலர்கள் பூத்துக் கிடக்கும்
அகன்ற வானிலே
அழகுக்கே இலக்கணமான பூரணமான அழகே!
நின் அழகு ஒளியின்றி இன்று மருகுகிறேன்!
என்று உன் திருமுகம் அழகாய் சிரிக்குமோ!
பழைய இனிய கவிஞருக்கெல்லாம் கன்னியாய்
என்றும் உந்தன் இதயமெனும் வீதியிலே
என் வாழ்வு இணைந்திட அலைகின்றேன்!
இலையின் மேலுள்ள பனித்துளி போன்றவள் நான்!
நின் அன்பு ஒளியிலே மிளிரும் நான்
காலத்தின் விளிம்பில் நடமாடும் இளமங்கை!
வாழ்வு எனும் இனிமையான தோப்பினுள்ளே
என் நிலையின்றி உன் அன்பில் ஆடுகின்றேன்!
உன்னை காணாத நாள் வாடும் அழகுமலரே!
என்நிலை மாறி இன்பம் விரைவில் வருகவே!
உன் திருமுகம் காண இன்னும் இத்தனை நாட்களா?
விரைவில் நிலவே உன் திருமுகத்தைக் காட்டு!

0 Comments:
Post a Comment
<< Home