Saturday, March 28, 2026

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

மழலைச் செல்வம்!

மலைவீழ் அருவியின் மௌனமான ஒலியிலும்

தென்றலில் சலசலக்கும் மரத்தின் ஓதையிலும்காவினுள் இன்னிசைக்கும் வண்டின் சப்தத்திலும்

அன்புள்ளத்தின் ஊற்றெனப் பெருகிவரும் வெள்ளத்திலும்

இளம்மாலையில் தென்னை வீசும் ஒய்யாரத்திலும்

செந்நிற தேவனின் வரவை தெளிவுடனே

அறிவிக்கும் முன்னே இருக்கும் மயக்க

இருளின்

மனமார்ந்த அமைதியின் இசையிலும்

எனதன்புத் தலைவனின் மழலை மொழியினை

பாங்குடனே கேட்கிறேன் இப்புவியின்

இயற்கை மடியினிலே எனது மழலைச் செல்வமே

எந்தன் உயிரே!


30.07.75 12.20 pm


வாழ்க்கை வீதியிலே!


ஆற்று வெள்ளம் கரைபுரண் டோட

ஆற்றுமோ இவ்வுள்ளம் ஓடுகின்ற

காலவெள்ளத்தில் அரசன் எனது

தென்றலில் தள்ளாடும் எழில் வண்ணன்!

பொழிலில் மலரும் அழகு குணமலரே!

இதழ்விரித்துச் சிரிக்கும் சிரிப்பில் எழில்ததும்பும்

வண்ண ஓவியமே! நிந்தன் தந்தவண்ண

இதயத்தின் அன்பு தீபமே! வசந்தா

வாழ்க்கை வீதியிலே நீர் எமது குன்றிலிட்ட விளக்கு,

பச்சை வண்ண கண்கவரும் ஊஞ்சலில்

பாசம் எனும் கயிற்றில் ஆடுகின்றோம்!

உலகை மறந்து உறவை நினைந்து!


0 Comments:

Post a Comment

<< Home