வசந்தா கவிதைகள்!2
வசந்தா கவிதைகள்!2
மகன் எழில்
இமயத்தில் நிற்கும் இதயமே
என்றும் நீதான் குலவிளக்கு
குமுறும் எரிமலையின் ஊற்று
குளிரும் உன்மனம் ஒருநாளில்
விதையாய் வீழ்ந்து இன்று
விண்முட்ட எழுந்து நிற்கிறாய்!
மனதின் நம்பிக்கை விளக்கு
மலர்ந்திட நானும் பார்த்திருப்பேன்
மருமகள் சத்யபாமா
தாமிரபரணி தரணியில் இருந்து
வந்த தரமான மருமகள்தான்!
சத்தியத்தில் தலைநிமிரும் சத்யாதான்!
எண்ணங்களில் செயல்களில்
சீரான சிந்தனை! குடும்பத்தில் சிறப்பு!
மென்பொருள் துறையில் சிறந்த முயற்சி!
குடும்பத்தில் ஈடுபாடு ! குழந்தைகளுடன் மகிழ்ச்சி!
என்றும் நிலைத்திட இயற்கை துணைவேண்டும்!
பேரன் நிக்கில் அபிசேக்!
சிந்தனை சிறகடிக்க சிப்பிக்குள் முத்தாக
எங்கள் வாழ்வில் உதித்த உன்னத பேரனே!
மழலை முதல் என்றுமிங்கே எங்களின்
இதய வானிலே வண்ணச் சிறகனே!
இமயம் தொட என்றும் விரும்பும்
உந்தன் நலம்விரும்பும் உள்ளங்கள்
எங்கும் உன்னுடன் வாழும் பாசமலர்கள்!
பேரன் வருண் ஆதித்யா!
செல்லக் குட்டியின் வண்ண ஓவியம்
சிந்தை மயக்கும் அழகான கைவண்ணம்!
எல்லோருக்கும் வணக்கம் கூறும் பண்பு சிறக்க
வாழ்வின் இலட்சியத்தில் மனம்போல் உயர்ந்திட
கடைக்குட்டியின் அன்பு வெள்ளம்
மகிழவைக்கும் உண்மையே!
செல்லச் சிணுங்கல் கிறங்கவைக்கும்!
என்றுமே வாழ்வில் இன்பமே!

0 Comments:
Post a Comment
<< Home