Saturday, March 28, 2026

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

மகள் சுபா -- 

இவள்தான் என் தேவதை-- இரு

கால் முளைத்த தாமரை

தோளோடு தோளாய் நின்றவள் நீ

தோன்றிய நாள்முதல் நெஞ்சிலே

என்றும் வாடாத வண்ண மலரே

நினைவில் நீந்தும்  விண்மீன்


மருமகன் C.ரவிக்கு வாழ்த்து!


நித்தம் உதிக்கும் இளம் சூரியனே

மந்திரப் புன்னகை மனதை வருடும்

சுயநலமில்லா சிறகடிக்கும் சிந்தனைகள்

மக்கள் அனைவரையும் மகிழ்விக்கும்

 மலரே

தங்களை எங்களுடன் இணைத்த

 உறவிழையே

தரமான வாழ்வுக்கு வழிவகுத்த

 வல்லவனே

நித்தம் வாழ்வில் ஒளிவீசும் உண்மையே

குலம் விளங்க நீடூழி வாழ்க பல்லாண்டு!


பேரன் சுஷாந்த் ஸ்ரீராம்!


குடும்பத் தோட்டத்தில் மலர்ந்த முதல்மலரே!

இன்ப ஊற்றில் நனைத்த முத்தே!

அமைதியான உறுதியான உன்னத பேரனே!

வாழ்க்கை முழுமையானது உன்னால்!

வானுயர  வாழ்வில் புகழடைய

மனமிங்கு எந்நாளும் வாழ்த்துமே!

என்றுமே உயர்ந்த எண்ணங்கள்

உலகினிலே முதல்நிலை அடையுமே!

0 Comments:

Post a Comment

<< Home