வசந்தா கவிதைகள்!
வசந்தா கவிதைகள்!
10.06.75. 12.15 pm
அன்பு நிழலிலே!
இயற்கையன்னை ஏற்றிவைத்த எழில் சிற்பியே!
இன்பத்தினை வழங்கிவைத்த வளமார்ந்த வள்ளலே!
காவினுள் சுற்றி வட்டமிடும் வண்டெல்லாம்
என் மனமெனும் மஞ்சத்தில் மங்காத மாயவனே!
உன்நினைவில் என்நெஞ்சம் எஞ்ஞான்றும் வாடுதம்மா!
உள்ளத்தில் உள்ளுந்தோறும் உவகை பெருகுதம்மா!
அன்புக்குப் பொருள்கூறி அறிவைப் புகட்டி
எக்கலையும் சிறப்புறவே பயின்று புகழுடன்
திசையெட்டும் உன்புகழ் பரவ இந்த ஏழை
மனம் அங்கனமே உன் அடி நீழலில் என்றென்றும்
அடிமையாகி என்மீது அன்புமழை நீங்காது பொழியவே! அதுவே நான்விரும்பும் வாழ்க்கை இன்பம்!
அதற்கென அரசனின் மனநிலையறிய
அடியவளும்
விரும்பி இன்று முழுமையாக பெறவே
மது அருந்திய வண்டானேன் மயங்கியே நிற்கிறேன்!
மன்னவனின் அன்பு நிழலில்!
எழுதிய ஆண்டு 1971
தமிழ் தெய்வம்!
தமிழ் வளர்க்கும் இதயத்தில் தான்வளரும் தெய்வம்!
அமிழ்தினும் இனியசொல்லாம் முருகனொரு தெய்வம்!
சொல்லுக்குப் பொருள்கூறி சுவைதந்த தெய்வம்! தான்
சொல்லாகிப் பொருளாகி சுவையுமான தெய்வம்!
குன்றத்தில் குடியிருக்கும்
தெய்வம் எங்கள் தெய்வம்!
குறவள்ளி தனைமணந்த
தெய்வம் எங்கள் தெய்வம்!
உம் வாழ்வெனும் காவினுள் நலம்பெருகி அருமலர் மலர
நம் வயலூர் ஆனந்த
தெய்வமருள் செய்கவே!

0 Comments:
Post a Comment
<< Home