Saturday, March 28, 2026

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

கமலா

இயற்கை!

தென்னமர தோப்பினுள்ளே தோகைமயில் ஆட

தென்றல்வீச கூகை குரலெடுக்க சந்தனமணம்

வீச வீறு கொண்டெழும் ஆண்மை உள்ளம்

கோப்பையிலே குடியிருக்க இசைவெள்ளம் நதியாக

இளநெஞ்சம் படகாக ஆட பெண்அன்னம் ஆற்றிலே

இளந்தென்றல் மிதக்க நிலவென்னும் மங்கை

நிறையொளி வீச  அன்பென்னும்  மழையதனில்

ஆடுதம்மா இருநெஞ்சம் ஆசைபொங்க

பச்சைக்கிளி இரண்டு மரகத ஊஞ்சலிலே

பாசம் எனும் கயிற்றில் ஆடுதம்மா!

உலகை மறந்து உறவை நினைந்து!


என்மனைவி என்னைப்பற்றி எழுதிய கவிதை:


08.06.75


எங்கள் மணநாள்: 29.05.75


தென்னவன் என்னவன்!


இமயத்தின் உச்சியென உயர்ந்திட்ட உன்னதன்

எந்தன் கனவெனும் மாளிகையின் மன்னவன்!

அன்னவனின் பின்எந்தன் பேதைமனம் பற்றியது

இன்றவன் என்னவன் தென்னவன் மன்னனவன்

உள்ளமெனும் மலர்வீதியில் உலவிவரும் தென்றலவன்

பொதிகை மலைபிறந்த மலர்வனம் எந்தன்

மனமெனும் மாளிகையில் ஆட்சிசெய்யும் அரசன்!

காலமெனும் கடலிலே மலர்கிறேன்

என்னவனின் நெஞ்சத்தில் வண்ண மலரென!


வாழ்க்கை எனும் பாதையிலே!


வாழ்க்கையெனும் பாதையிலே வாழ்கின்ற

வாடிக்கையாளர் நாமெல்லாம் இப்புவிமேல்!

இப்புண்ணிய மண்ணிலே வாழ்ந்த

வாழ்வு

வளமற்று இன்பமற்று ஏங்குதம்மா!

கண்ணிருந்தும்  கும்மிருட்டாய்

செவியிருந்தும் செவிடாக

வாயிருந்தும் ஊமையாய்

வாழ்வதற்கு மனமின்றி மங்குவதற்கா

வாழ்க்கையெனும் பாதையிலே ஏங்குகின்றா

0 Comments:

Post a Comment

<< Home