Friday, March 06, 2026

தென் கி கவிதை ஆர்வம்

 [06/03, 13:45] Vovkaniankrishnan:

 கிவாஜவின் பாடலாம் பாட்டு படித்தும்

தவிக்கிறேன் இன்னும் கவிக்கு.

[06/03, 13:54] Vovkaniankrishnan:

 உரைநடை யில்சிறப் பானதென் கிக்கு

வரவில்லை யேநற் கவி.

[06/03, 16:18] Madurai Babaraj: 

சொன்னது யாரோ? கவிதை படைக்கின்ற

நம்பிக்கை உண்டே உணர்.

பாபா

[06/03, 16:40] Vovkaniankrishnan: 

கவிதை எழுதலாம் எல்லோரும் உள்ளம்

கவிதையால் நிற்பின் நிறைந்து.

[06/03, 16:40] Madurai Babaraj:

 குறள்வெண்பா நாளும் படைக்கின்ற 

நீங்கள்

சிறப்பாய்க் கவிஞர்தான்! சொல்.


பாபா



0 Comments:

Post a Comment

<< Home