Friday, March 27, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 11

 குழந்தைகளுக்கு குறளமுதம் 11

2. வான்சிறப்பு

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.


மேகம் அண்ணா வாங்க!

இந்தக் குறளின் பொருளை

கொஞ்சம் சொல்லிப் போங்க!

குழந்தை சத்தம் கேட்டு

மேகம் கீழே பார்த்து

சிரித்துச் சிரித்து வந்தே

குழந்தை அருகில் வந்தது!

கடலில் நீரை முகந்து

குளிர்ச்சி யாக மாற்றி

உலகில் மழையைப் பொழிவேன்!

உயிரை வாழ வைப்பேன்!

உலகை வாழ வைக்கும்

உயிர்நீர் ஆவ தாலே

அமிழ்தம் என்றே வள்ளுவர்

அன்றே எழுதி வைத்தார்.!

கேட்ட தற்கு நன்றி!

சென்று வரு  கின்றேன்!





0 Comments:

Post a Comment

<< Home