குறள் இனிது நூல் வெளியீட்டு விழா வாழ்த்துப்பா!
நூலாசிரியர்.சோம வீரப்பன்
05.10.18
நற்றமிழ் வித்தகர் ராம நுசனாரின்
அற்புத மான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை
வெற்றியுடன் கொண்டுசென்ற பாணியில் மெய்மறந்தோம்!
சொற்குவை பொற்குவைதான் சொல்.
குறளும் இனிது விழாவும் இனிது!
தொடக்கம் முதலாய் முடியும் வரைக்கும்
நிறைவில் மகிழ்ந்து திளைத்தோம் ரசித்து!
நடந்த முறையும் ஒருங்கிணைத்த மாண்பும்
அடடா! அற்புதந்தான் சொல்.
குத்துவிளக் கேற்றி நிகழ்ச்சி தொடங்கியது!
முத்துமுத்தாய் சொன்ன வரவேற்பு அரும்பியே
முத்தாய்ப்பாய் மாண்புமிகு பாண்டிய ராசனார்
நற்றமிழ் ஏந்தும் மகிழுரை ஏந்தியது
அத்தனையும் ஊற்றியது தேன்.
நீதி் அரசரின் நேர்த்தியான பண்புரையும்
ஈடில்லா ராசேந்ரன் வள்ளுவத் தொலைநோக்கும்
கோதிவிடும் தென்றல்போல் லேணா தமிழ்வாணன்
பேசியதும், அமைச்சரின் இல்லாள் மனவாழ்த்தும்
கூடி இருந்த குறளுறவின் ஆர்வமும்
நாடிவந்த இந்து ரமேஷின் உரைவாழ்த்தும்
தூவியதே இன்பத்தை அங்கு.
சோமவீ் ரப்பன் வழங்கிய ஏற்புரை
பாமணக்க சூழ்ந்த எளிமை எழுச்சியும்
தேனகமாய் அவ்வரங்கை மாற்றியது உண்மையே!
நாமணக்க நல்விருந்தும் தந்தனர்! நன்றியை
நாமிங்கே தந்தோம் மகிழ்ந்து.
0 Comments:
Post a Comment
<< Home