குழந்தைகளுக்குக் குறளமுதம்
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
அங்கும் இங்கும் அலைகின்ற
அருமை மேகக் கூட்டமே!
அருகில் வந்து நில்லாயோ!
குறளின் பொருளைச் சொல்லாயோ!
அன்புத் தம்பி தங்கையே!
ஆகா நாங்கள் வந்துவிட்டோம்!
மழையைச் சுமந்து வருகின்றோம்!
மண்ணகம் குளிரத் தருகின்றோம்!
உலக உயிர்களைக் காப்பதற்கு
உணவைத் தருவதும் மழைதானே!
தாகம் தன்னைத் தீர்ப்பதற்கு
உணவாய் உள்ளதும் மழைதானே!
உணவைத் தருவதும் மழையாகும்!
உணவாய் உள்ளதும் மழையாகும்!
உங்கள் உயிரைக் காக்கின்றோம்!
எங்கள் சிறப்பும் இதுதானே!
கடமை எங்களை அழைக்கிறது!
விரைந்து நாங்கள் செல்கின்றோம்!
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
அங்கும் இங்கும் அலைகின்ற
அருமை மேகக் கூட்டமே!
அருகில் வந்து நில்லாயோ!
குறளின் பொருளைச் சொல்லாயோ!
அன்புத் தம்பி தங்கையே!
ஆகா நாங்கள் வந்துவிட்டோம்!
மழையைச் சுமந்து வருகின்றோம்!
மண்ணகம் குளிரத் தருகின்றோம்!
உலக உயிர்களைக் காப்பதற்கு
உணவைத் தருவதும் மழைதானே!
தாகம் தன்னைத் தீர்ப்பதற்கு
உணவாய் உள்ளதும் மழைதானே!
உணவைத் தருவதும் மழையாகும்!
உணவாய் உள்ளதும் மழையாகும்!
உங்கள் உயிரைக் காக்கின்றோம்!
எங்கள் சிறப்பும் இதுதானே!
கடமை எங்களை அழைக்கிறது!
விரைந்து நாங்கள் செல்கின்றோம்!
0 Comments:
Post a Comment
<< Home