Sunday, February 03, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

சென்ற ஆண்டு மாமாஊர்
செழிப்பாய் இருத்ததை நான்பார்த்தேன்

இந்த ஆண்டு ஏனந்த
செழிப்பைக் காணோம் சொல்லம்மா!

மழையே இல்லை என்செல்லம்
அதனால் விளைச்சல் இல்லையே!

விளைச்சல் தானே வருமானம்
அதுவே குறைந்து போனதே!

அதனால் உழவுத் தொழிலிங்கே
நின்று போன கோலம்பார்.!

ஊரே வறட்சிப் பிடியினிலே
வறண்டு போனது பார்பார்பார்!

இதுதான் காரணம் தெரிஞ்சுக்கோ
மழையே ஆதாரம் புரிஞ்சுக்கோ!


0 Comments:

Post a Comment

<< Home