குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அந்தோ அந்தச் செல்வந்தர்
அன்பு என்றால் என்னவிலை?
என்றே கேட்பார் பாரம்மா!
கண்ணுக் கெட்டிய தூரம்வரை
வீடு மனைகள் என்றேதான்
அனைத்தும் அவருக் குரியதுதான்!
அன்பே இல்லா இதயத்தால்
எல்லாம் தமக்குரியர் ஆகிவிட்டார்!
அந்த ஏழை விவசாயி
நாளும் உழைத்தே உருக்குலைந்தார்
உலகில் உயிரினம் உண்பதற்கே
உடல்பொருள் ஆவி அனைத்தையுமே
தியாகம் செய்யும் விளக்கானார்!
இந்தக் குறளின் பொருளானார்!
மற்றவர் வாழ உழைப்பவர்கள்
தன்னல மற்ற ஏந்தல்கள்!
அன்பின் சின்ன மாவார்கள்!
பொதுநலத் தூதர் ஆவார்கள்!
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அந்தோ அந்தச் செல்வந்தர்
அன்பு என்றால் என்னவிலை?
என்றே கேட்பார் பாரம்மா!
கண்ணுக் கெட்டிய தூரம்வரை
வீடு மனைகள் என்றேதான்
அனைத்தும் அவருக் குரியதுதான்!
அன்பே இல்லா இதயத்தால்
எல்லாம் தமக்குரியர் ஆகிவிட்டார்!
அந்த ஏழை விவசாயி
நாளும் உழைத்தே உருக்குலைந்தார்
உலகில் உயிரினம் உண்பதற்கே
உடல்பொருள் ஆவி அனைத்தையுமே
தியாகம் செய்யும் விளக்கானார்!
இந்தக் குறளின் பொருளானார்!
மற்றவர் வாழ உழைப்பவர்கள்
தன்னல மற்ற ஏந்தல்கள்!
அன்பின் சின்ன மாவார்கள்!
பொதுநலத் தூதர் ஆவார்கள்!
0 Comments:
Post a Comment
<< Home