குழந்தைக்குக் குறளமுதம்!
குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
அம்மா அம்மா வாயேன்!
தம்பிப் பாப்பா பாரேன்!
தட்டில் உள்ள சோறைக்
கையால் நன்கு பிசைந்து
கூழாய் மாற்றி ஒழுக
இரண்டு கையைத் தட்டி
பொக்கை வாயைக் காட்டி
சிரிக்கு தம்மா பாரேன்!
அசிங்கம் தானே அம்மா
வந்து ரெண்டு போடு!
அம்மா வந்து தூக்கி
கொஞ்சி முத்தம் தந்தாள்!
மகளே இந்தக் கூழ்தான்
அமுதம் என்றே வள்ளுவர்
இந்தக் குறளில் சொன்னார்!
நீயும் இவனைப் போலதான்
அந்த நாளில் இருந்தாய்
நானும் ரசித்துச் சிரித்தேன்!
குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
அம்மா அம்மா வாயேன்!
தம்பிப் பாப்பா பாரேன்!
தட்டில் உள்ள சோறைக்
கையால் நன்கு பிசைந்து
கூழாய் மாற்றி ஒழுக
இரண்டு கையைத் தட்டி
பொக்கை வாயைக் காட்டி
சிரிக்கு தம்மா பாரேன்!
அசிங்கம் தானே அம்மா
வந்து ரெண்டு போடு!
அம்மா வந்து தூக்கி
கொஞ்சி முத்தம் தந்தாள்!
மகளே இந்தக் கூழ்தான்
அமுதம் என்றே வள்ளுவர்
இந்தக் குறளில் சொன்னார்!
நீயும் இவனைப் போலதான்
அந்த நாளில் இருந்தாய்
நானும் ரசித்துச் சிரித்தேன்!
0 Comments:
Post a Comment
<< Home