குழந்தைக்குக் குறளமுதம்!
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
அன்பைப் பொழியும் தமிழம்மா!
அறிவைப் புகட்டும் தமிழம்மா!
இந்தக் குறளின் பொருள்தன்னை
கொஞ்சம் சொல்லிக் கொடுங்கம்மா!
நன்றாய் வாழ்வோர் வளமிழந்து
நலியச் செய்வது வான்மழையே!
பருவ மழையோ பொய்த்துவிட்டால்
வறட்சிப் புயலில் வளமிழப்போம்!
மீண்டும் மழையோ பொழிந்துவிட்டால்
இழந்த வளங்கள் சேர்ந்துவிடும்!
வளத்தை இழப்பதும் வான்மழையால்!
இழந்ததைப் பெறுவதும்தேன்மழையால்!
வாழ்வில் இன்பமும் மழையாலே!
வாட்டும் துன்பமும் மழையாலே!
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
அன்பைப் பொழியும் தமிழம்மா!
அறிவைப் புகட்டும் தமிழம்மா!
இந்தக் குறளின் பொருள்தன்னை
கொஞ்சம் சொல்லிக் கொடுங்கம்மா!
நன்றாய் வாழ்வோர் வளமிழந்து
நலியச் செய்வது வான்மழையே!
பருவ மழையோ பொய்த்துவிட்டால்
வறட்சிப் புயலில் வளமிழப்போம்!
மீண்டும் மழையோ பொழிந்துவிட்டால்
இழந்த வளங்கள் சேர்ந்துவிடும்!
வளத்தை இழப்பதும் வான்மழையால்!
இழந்ததைப் பெறுவதும்தேன்மழையால்!
வாழ்வில் இன்பமும் மழையாலே!
வாட்டும் துன்பமும் மழையாலே!
0 Comments:
Post a Comment
<< Home