Sunday, February 03, 2019

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

அண்ணா அண்ணி குறளுக்குப்
பொருளைச் சொல்லித் தாருங்கள்!

குறளின் பொருளைச் சொல்வதற்கு
நாங்கள் இங்கே வந்துவிட்டோம்!

மழையோ இங்கே பெய்யாமல்
வறட்சிப் பிடியில் சிக்கவைத்தால்

ஊரும்  உலகமும்  வறண்டுவிடும்
அனைத்து இயக்கமும் நின்றுவிடும்!

விழாக்கள் பூசை நடக்காது!
வாழ்க்கைப் பாலை வனமாகும்!

வானில் வாழ்வோர் எனச்சொல்லும்
வானோர் களுக்கும் பூசையில்லை!

இதுதான் தம்பி பொருளாகும்!
மழையின் சிறப்பும் இதுவாகும்!


0 Comments:

Post a Comment

<< Home