Sunday, February 03, 2019

குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

தாத்தா தாத்தா புல்லெங்கே
எல்லாப் புல்லும் காஞ்சுபோச்சே

என்ன தாத்தா காரணமோ
நீங்க தண்ணி ஊத்தலையா?

இல்லடா செல்லம் இந்தவானம்
மழைதந்தா  தானே புல்வளரும்!

மழையே இன்றி பூமியிங்கே
வறண்டு காய்ந்து போய்விட்டால்

புல்லின் நுனிகூட துளிர்க்காது
 பூண்டும் இங்கே தழைக்காது!

மழைக்கரம் பட்டால் போதுமிங்கே
பச்சைப் பசேல்தான் இவ்வுலகம்!

இல்லா விட்டால் பட்டுவிடும்!
இதுதான் விளக்கம் என்கண்ணே!



0 Comments:

Post a Comment

<< Home