Sunday, February 03, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்

மக்கட்பேறு

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

இந்தக் குறளின் பொருளென்ன
அம்மா அப்பா சொல்லுங்க!

பருவம் பார்த்துக் குழந்தைகளைப்
பள்ளியில் சேர்த்தல் எம்கடமை!

படிக்கப் படிக்க கற்கின்றாய்
அறிவை வளர்த்து நிற்கின்றாய்

பெற்றோர் ஆசான் பெருமையுடன்
ஆற்றல் தன்னில் உயர்கின்றாய்!

இப்படிப் பட்ட அறிவார்ந்த
குழந்தைகள் தானே நற்பேறு!

மற்ற பேறுகள் எல்லாமே
பேறுகள் இல்லை ஊறுகளே!


0 Comments:

Post a Comment

<< Home