குறளமுதம்
குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
அன்ன தானக் கூடங்கள்
சென்ற ஆண்டு மூடவில்லை
இந்த ஆண்டு மூடியதேன்
காரணம் என்ன சொல்லம்மா!
அந்தோ பாராய் துறவிகளோ
இங்கு மங்கும் அலைகின்றார்
என்ன காரணம் சொல்லம்மா?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
இந்த ஆண்டு முழுவதிலும்
கொஞ்சம் கூட மழையில்லை
நாடே வறட்சிக் கோலத்தில்
தத்தித் தத்தித் திண்டாட
மக்கள் எல்லாம் கலங்குகின்றார்
தானம் தவமும் செய்வதற்கு
கையில் ஓட்டம் இல்லையே
கையைப் பிசைந்து நிற்கின்றார்.
தண்ணீர் இல்லை எனச்சொன்னால்
எல்லாம் இங்கே தள்ளாடும்!
இந்தக் குறளின் பொருளிதுதான்
இதுதான் காரணம் புரிந்துகொள்!
குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
அன்ன தானக் கூடங்கள்
சென்ற ஆண்டு மூடவில்லை
இந்த ஆண்டு மூடியதேன்
காரணம் என்ன சொல்லம்மா!
அந்தோ பாராய் துறவிகளோ
இங்கு மங்கும் அலைகின்றார்
என்ன காரணம் சொல்லம்மா?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
இந்த ஆண்டு முழுவதிலும்
கொஞ்சம் கூட மழையில்லை
நாடே வறட்சிக் கோலத்தில்
தத்தித் தத்தித் திண்டாட
மக்கள் எல்லாம் கலங்குகின்றார்
தானம் தவமும் செய்வதற்கு
கையில் ஓட்டம் இல்லையே
கையைப் பிசைந்து நிற்கின்றார்.
தண்ணீர் இல்லை எனச்சொன்னால்
எல்லாம் இங்கே தள்ளாடும்!
இந்தக் குறளின் பொருளிதுதான்
இதுதான் காரணம் புரிந்துகொள்!
0 Comments:
Post a Comment
<< Home