குழந்தைகளுக்குக் குறளமுதம்!
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பெரியப்பா பெரியப்பா!
இந்தக் குறளைக் கேளுங்க!
பொருளைச் சொல்லி விளக்குங்க!
பொறுமை யாகச் சொல்லுங்க!
மகனே மகளே குறளுக்கு
இதுதான் விளக்கம் கவனிங்க:
பள்ளிக் கூட ஆசானும்
உங்கள் நல்ல பெற்றோரும்
நல்ல பண்பைச் சொல்வாங்க
கற்றுக் கொண்டால் நல்லது!
கெட்ட பழக்கம் வேண்டாமே
பழியைச் சுமக்க வைத்துவிடும்!
பண்புகள் மிளிரும் குழந்தைகள்
குடும்பம் போற்றும் முத்துக்கள்!
பழிகள் இன்றி வாழ்ந்தால்தான்
நீண்ட காலம் புகழுடனே
மற்றவர் போற்ற வாழ்ந்திடலாம்!
துன்பம் இன்றி வாழ்ந்திடலாம்!
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பெரியப்பா பெரியப்பா!
இந்தக் குறளைக் கேளுங்க!
பொருளைச் சொல்லி விளக்குங்க!
பொறுமை யாகச் சொல்லுங்க!
மகனே மகளே குறளுக்கு
இதுதான் விளக்கம் கவனிங்க:
பள்ளிக் கூட ஆசானும்
உங்கள் நல்ல பெற்றோரும்
நல்ல பண்பைச் சொல்வாங்க
கற்றுக் கொண்டால் நல்லது!
கெட்ட பழக்கம் வேண்டாமே
பழியைச் சுமக்க வைத்துவிடும்!
பண்புகள் மிளிரும் குழந்தைகள்
குடும்பம் போற்றும் முத்துக்கள்!
பழிகள் இன்றி வாழ்ந்தால்தான்
நீண்ட காலம் புகழுடனே
மற்றவர் போற்ற வாழ்ந்திடலாம்!
துன்பம் இன்றி வாழ்ந்திடலாம்!
0 Comments:
Post a Comment
<< Home