Sunday, December 01, 2019

திருக்குறள் வித்தகர்
அ.கி. செல்வக்கணபதி புகழ் வாழ்க!

செல்வக் கணபதி வள்ளுவ வித்தகர்!
இல்லறத்தில் நல்லறம் போற்றிய உத்தமர்!
இல்லமும் உள்ளமும் செந்தமிழ்த் தேன்மணத்தில்
அல்லும் பகலும் தவழ்ந்துவர வாழ்ந்தவர்!
தெள்ளுதமிழ்  நாயகரை  வாழ்த்து.

நற்கூடல் மன்றம் தொடக்க விழாவில்
நற்றமிழில்  ஆசிகள் தந்தே ஊக்குவித்தார்!
எப்பொழுது வீட்டிற்குச் சென்றாலும் இன்முகத்தால்
வற்றாத அன்புடன் என்னை வரவேற்பார்!
அற்புத மானவரை வாழ்த்து.

எந்தன் கவிதைகளைப் பார்த்து திருத்தியே
என்னைக் கவிஞனாக மாற்றிய ஆசானை
நன்றியுடன் நாளும் வணங்கி மகிழ்கிறேன்!
என்றும் நினைத்திருப்பேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home