பன்முக ஆற்றலாளர் நண்பர் ப.திருமலை அவர்களுக்கு வாழ்த்து!
திருமலை மன்னர் அரண்மனை என்றால்
கருத்தில் வருவது மாமதுரை! நண்பர்
திருமலை என்றதும் மாமதுரை ஊர்தான்
கருத்தில் வருகிறது சொல்.
அரசியல் மற்றும் இதழியலில், காந்தி
பெரியார் கருத்தியலில்
கார்ல்மார்க்ஸ் கருத்தில்
கருத்தாய்ப் படித்தேதான்
பட்டயம் பெற்றுப்
பெருமிதம் கொண்டவரை வாழ்த்து.
இதழியலில் நாற்பதாண்டு நற்பணி செய்தே
இதழ்கள் பலவற்றில் ஆற்றிய சேவை
கடமை அனுபவங்கள்
பக்குவத்தைத் தந்தே
உதவிட வாழ்கின்றார் இன்று.
முப்பத்து நான்குநூல்கள் தம்மைப் படைத்தவர்!
கட்டுரை யாளர் எழுத்தாளர் மன்பதைச்
சுற்றியே மையப் படுத்தும்
சிக்கலை
அற்புதமாய்க் காட்டும் எழுத்து.
பன்முக ஆற்றல்கள் தன்னகத்தே கொண்டவர்!
எண்ணற்ற நூலின் எழுத்துப் புரட்சிகண்டே
தந்தனர் இங்கே விருதுகளை வாழ்த்தியே!
பண்பாளர் வாழ்கவென்றே
வாழ்த்து.
பெற்றோரின் ஆசி, மனைவி மகளுடன்
உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ்ந்திருக்க
நற்றமிழ்போல் பல்லாண்டு வாழ்க வளமுடன்!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
நமதுமண் வாசம் இதழா சிரியர்!
மணக்கின்ற மண்ணக மாண்புகளைக் காட்டும்
எழுத்துகளை ஏந்திவரும் இந்த இதழை
வலம்வரச் செய்வதை வாழ்த்து.
வளரும் எழுத்தாளர் எல்லோர்க்கும் ஊக்கம்
அளித்தேதான் ஊக்குவிக்கும் நண்பரை வாழ்த்து!
குறள்களைப் போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
என்றும். நட்புடன்
மதுரை பாபாராஜ்
திருமலை மன்னர் அரண்மனை என்றால்
கருத்தில் வருவது மாமதுரை! நண்பர்
திருமலை என்றதும் மாமதுரை ஊர்தான்
கருத்தில் வருகிறது சொல்.
அரசியல் மற்றும் இதழியலில், காந்தி
பெரியார் கருத்தியலில்
கார்ல்மார்க்ஸ் கருத்தில்
கருத்தாய்ப் படித்தேதான்
பட்டயம் பெற்றுப்
பெருமிதம் கொண்டவரை வாழ்த்து.
இதழியலில் நாற்பதாண்டு நற்பணி செய்தே
இதழ்கள் பலவற்றில் ஆற்றிய சேவை
கடமை அனுபவங்கள்
பக்குவத்தைத் தந்தே
உதவிட வாழ்கின்றார் இன்று.
முப்பத்து நான்குநூல்கள் தம்மைப் படைத்தவர்!
கட்டுரை யாளர் எழுத்தாளர் மன்பதைச்
சுற்றியே மையப் படுத்தும்
சிக்கலை
அற்புதமாய்க் காட்டும் எழுத்து.
பன்முக ஆற்றல்கள் தன்னகத்தே கொண்டவர்!
எண்ணற்ற நூலின் எழுத்துப் புரட்சிகண்டே
தந்தனர் இங்கே விருதுகளை வாழ்த்தியே!
பண்பாளர் வாழ்கவென்றே
வாழ்த்து.
பெற்றோரின் ஆசி, மனைவி மகளுடன்
உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ்ந்திருக்க
நற்றமிழ்போல் பல்லாண்டு வாழ்க வளமுடன்!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
நமதுமண் வாசம் இதழா சிரியர்!
மணக்கின்ற மண்ணக மாண்புகளைக் காட்டும்
எழுத்துகளை ஏந்திவரும் இந்த இதழை
வலம்வரச் செய்வதை வாழ்த்து.
வளரும் எழுத்தாளர் எல்லோர்க்கும் ஊக்கம்
அளித்தேதான் ஊக்குவிக்கும் நண்பரை வாழ்த்து!
குறள்களைப் போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
என்றும். நட்புடன்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home