Thursday, March 05, 2020

குறள்நெறிக் குரிசில் சி. இராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்து!

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் என்கின்ற
வள்ளுவத்தை வாழ்வியலாய்ப் போற்றியே வாழ்பவர்!
வள்ளுவக் கூட்டுக் குடும்பத்தின் நிர்வாகி!
தெள்ளத் தெளிவாக கருத்தை எடுத்துரைக்கும்
உள்ளத்தில் மாசின்றி வாழ்கின்ற நல்லவர்!
வள்ளுவ நாணயம் ஏந்தும் மறுபக்கம்!
பாமரர்க்கும் இங்கே பரிமே லழகரென்னும்
பாமரரும் நன்கு புரிந்துகொள்ளும்
நூல்படைத்த
காவலர்! வள்ளுவத்தின் தூதரை வாழ்த்துவோம்!
ஈரடிபோல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home