தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் -- தலைமை நிர்வாகி -- ஓவியர்
தர்மன் ஞான சேகரன் அவர்களுக்கு வாழ்த்து!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்! செந்தமிழ்ப்
பற்றாளர்! பாவலர்! கிண்டி பொறியியற்
கல்லூரி சேர்ந்து பொறியியல் பட்டத்தை
நல்ல முறையில் முடித்தவர்! பாவரங்க
மேடையில் பாடிவந்த பாக்குயில் ஞானசேகர்!
நாடறிய வாழ்கின்றார் காண்.
டில்லி நிறுவனம் தந்த தலைமையினை
ஏற்றே திறம்பட நிர்வகித்த ஆற்றலாளர்!
பல்வேறு சாதனைகள் நிர்வாகக் காலத்தில்
எல்லைக்குள் செய்ததை வாழ்த்து.
தமிழ்நாட்டை விட்டேதான் டில்லி பொறுப்பை
தனிமனித ஆற்றலை நம்பித்தான் ஏற்றார்!
தொழிலாளர் மற்றும் அனைவருக்கும் தன்மேல்
புரிதலை உண்டாக்கி அன்புச் சிறகால்
அரவணைத்தார் பண்புகளால் தான்.
கொல்கத்தா தன்னில் தமிழ்ச்சங்கம் சென்றுபார்த்தார்!
எல்லோரும் ஆலோ சகராக ஆக்கிவிட்டார்!
நல்ல நிகழ்ச்சிகள் ஏற்பாடு் செய்தேதான்
வல்லவராய் மாறியே பாரதி மன்றத்தின்
அல்லும் பகலும் உழைக்கும் தலைவரானார்!
எல்லாம் உழைப்பின் பயன்.
புலம்பெயர்ந்த மக்கள் தமிழுணர்வைப் போற்றி
தரணியில் நன்றாய் ஒருங்கிணைத்துப் பார்த்தார்!
புலம்பெயர்ந்த மக்கள் தமிழ்மொழியின்
தூதர்!
உளம்வைத்தால் வாழும் தமிழ்.
ஆங்கிலேயர் வந்தேதான் ஆங்கிலத்தை நாட்டிவிட்டார்!
ஆங்கிலத்தைக் காட்டிலும் செம்மை மிகுந்துள்ள
செம்மொழியை மக்கள் நினைத்தால்
பரப்பலாம்!
இந்தக் கருத்தளித்தார் வாழ்த்து.
தமிழர்கள் பேச்சால் உணர்வால் செயலால்
தமிழை உயர்த்தவேண்டும்! ஆங்கிலச் சொல்லால்
தமிழ்நாட்டில் அம்மாவை அப்பாவை நாளும்
அழைக்காமல் செந்தமிழால் இங்கே அழைப்போம்!
தமிழெண்ணம் கொண்டவரை வாழ்த்து.
கலையார்வம் தூண்டிவிட ஓவியங்கள் தீட்டும்
கலைஞராய் மாறியே ஆற்றலுடன் வண்ணக்
கலவையைக் கையாளும் ஆளுமை கொண்டார்!
கலைமிளிரும் ஓவியரை வாழ்த்து.
உள்ளம் கவர்ந்த தலைவரோ காமராசர்!
தெள்ளத் தெளிவான கொள்கை உடையவர்!
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்றெண்ணும்
நல்லவர் வாழிய நீடு.
வள்ளுவர் கூட்டுக் குடும்ப உறுப்பினர்!
வள்ளுவத்தைப் போற்றும் குறள்நெறி ஆர்வலர்!
தெள்ளுதமிழ்ப் பாவலர்! பன்முக ஆற்றல்கள்
துள்ளுகின்ற பாவலரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
தர்மன் ஞான சேகரன் அவர்களுக்கு வாழ்த்து!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்! செந்தமிழ்ப்
பற்றாளர்! பாவலர்! கிண்டி பொறியியற்
கல்லூரி சேர்ந்து பொறியியல் பட்டத்தை
நல்ல முறையில் முடித்தவர்! பாவரங்க
மேடையில் பாடிவந்த பாக்குயில் ஞானசேகர்!
நாடறிய வாழ்கின்றார் காண்.
டில்லி நிறுவனம் தந்த தலைமையினை
ஏற்றே திறம்பட நிர்வகித்த ஆற்றலாளர்!
பல்வேறு சாதனைகள் நிர்வாகக் காலத்தில்
எல்லைக்குள் செய்ததை வாழ்த்து.
தமிழ்நாட்டை விட்டேதான் டில்லி பொறுப்பை
தனிமனித ஆற்றலை நம்பித்தான் ஏற்றார்!
தொழிலாளர் மற்றும் அனைவருக்கும் தன்மேல்
புரிதலை உண்டாக்கி அன்புச் சிறகால்
அரவணைத்தார் பண்புகளால் தான்.
கொல்கத்தா தன்னில் தமிழ்ச்சங்கம் சென்றுபார்த்தார்!
எல்லோரும் ஆலோ சகராக ஆக்கிவிட்டார்!
நல்ல நிகழ்ச்சிகள் ஏற்பாடு் செய்தேதான்
வல்லவராய் மாறியே பாரதி மன்றத்தின்
அல்லும் பகலும் உழைக்கும் தலைவரானார்!
எல்லாம் உழைப்பின் பயன்.
புலம்பெயர்ந்த மக்கள் தமிழுணர்வைப் போற்றி
தரணியில் நன்றாய் ஒருங்கிணைத்துப் பார்த்தார்!
புலம்பெயர்ந்த மக்கள் தமிழ்மொழியின்
தூதர்!
உளம்வைத்தால் வாழும் தமிழ்.
ஆங்கிலேயர் வந்தேதான் ஆங்கிலத்தை நாட்டிவிட்டார்!
ஆங்கிலத்தைக் காட்டிலும் செம்மை மிகுந்துள்ள
செம்மொழியை மக்கள் நினைத்தால்
பரப்பலாம்!
இந்தக் கருத்தளித்தார் வாழ்த்து.
தமிழர்கள் பேச்சால் உணர்வால் செயலால்
தமிழை உயர்த்தவேண்டும்! ஆங்கிலச் சொல்லால்
தமிழ்நாட்டில் அம்மாவை அப்பாவை நாளும்
அழைக்காமல் செந்தமிழால் இங்கே அழைப்போம்!
தமிழெண்ணம் கொண்டவரை வாழ்த்து.
கலையார்வம் தூண்டிவிட ஓவியங்கள் தீட்டும்
கலைஞராய் மாறியே ஆற்றலுடன் வண்ணக்
கலவையைக் கையாளும் ஆளுமை கொண்டார்!
கலைமிளிரும் ஓவியரை வாழ்த்து.
உள்ளம் கவர்ந்த தலைவரோ காமராசர்!
தெள்ளத் தெளிவான கொள்கை உடையவர்!
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்றெண்ணும்
நல்லவர் வாழிய நீடு.
வள்ளுவர் கூட்டுக் குடும்ப உறுப்பினர்!
வள்ளுவத்தைப் போற்றும் குறள்நெறி ஆர்வலர்!
தெள்ளுதமிழ்ப் பாவலர்! பன்முக ஆற்றல்கள்
துள்ளுகின்ற பாவலரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home