Friday, March 13, 2020

குறள் நெறியாளர் திருமதி.ந.கஜலெட்சுமி,
கொல்கத்தா அவர்களுக்கு வாழ்த்து!

கணவர்: க.நவநீதகிருஷ்ணன்
மகன்.    : ஆதித்யா

இந்திய தேசிய நூலகம் கொல்கத்தா
தன்னில்  துணைநூ லகராய் மற்றும்
தகவல் அலுவலராய் தன்கடமை ஆற்றும்
மகத்துவம் கொண்டவரை வாழ்த்து.

பன்மொழி ஆற்றல் படைத்தவர்!தஞ்சையில் சென்னையில் வாழ்ந்து பொறுப்புகளைக்
கண்ணுங் கருத்துமாய் ஏற்று நிறைவேற்று
இன்றிந்த கொல்கத்தா வங்கநகர் தன்னிலே
பன்முக ஆற்றலுடன் வாழ்கின்றார் வாழியவே!
பண்பகமாய் வாழ்பவரை வாழ்த்து.

நூல்கள் வெளியிட்ட  ஆற்றலைப் பெற்றவர்!
நூலக த்தொண்டில் சிறப்பினைப் போற்றி
விருதுகள் பெற்றவர்! லண்டன் நகரில்
கலந்தநல் லாற்றலை வாழ்த்து.

இணைய விழிப்புணர்வு போன்ற துறையில்
இணையற்ற சேவைகள் ஆற்றியவர்! ஆற்றல்
துணையாக தன்பங்கைச் செவ்வனே செய்யும்
மனங்கொண்ட ஆர்வத்தை வாழ்த்து.

தஞ்சை பிறந்தவூர்! இல்லறத்தில் நல்லறைத்தை
அன்புக் கணவன் நவநீ தகிருஷ்ணன்
பண்புமகன்  ஆதித்யா நால்வரும் இன்பமுடன்
அன்றாடம் பின்பற்றி வாழ்க மகிழ்ச்சியுடன்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

குறளின் குரல்குடும்ப ஆர்வலர்! நல்ல
இசைஞானம் கொண்டவர்! தன்னுடைய எட்டாம்
வயதிருந்தே  கர்நா டகயிசை கற்றார்
வளம்பல பெற்றுவாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home