Friday, March 06, 2020

உளவியல் பேராசிரியர் வெங்கட் வாழ்க!

உளவியல் பார்வையில் ஆய்வுகள் செய்தே
களத்தில் குறள்களுக்கு வெங்கட் அளித்த
விளக்கங்கள் எல்லாம் புதுமை ! அருமை!
பழனியப்பா தந்த பதிப்பாக நூல்தான்
வலம்வரும் மாண்பினை வாழ்த்து.

வெங்கட்டின் பார்வையோ ஆன்மிகக் கண்ணோட்டம்!
தன்கருத்தில் என்றும் தளராமல் நிற்பவர்!
பன்முக ஆற்றல் மிளிர்பவர்! வள்ளுவத்தில்
இன்னும் பலநூல் படைத்தவர்! வள்ளுவத்தைத்
தன்வழி யாய்க்கொண்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home