Friday, March 06, 2020

படப்புதிர் வித்தகர் அஷ்ரப் வாழ்க!

இரவுப் பொழுதில் ஏழரை யானால்
திருக்குறள் கேட்டுப் படப்புதிர் போட்டே
அறிவுப் பசிக்கே விருந்தளிக்கும் நண்பர்!
அருமை விளையாட்டைத் தந்தவர் அஷ்ரப்!
திருக்குறளை ஒப்பற்ற  ஒப்பீடு செய்தே
அரும்பெருந் தொண்டாற்றும் வித்தகர் அஷ்ரப்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home