Friday, March 06, 2020

கவிஞர் கமலக்குமார் தமிழ்போல் வாழ்க!

தமிழை முறையாய்க் கற்றறிந்து யாப்பின்
அமுதைச் சுவைத்தறிந்து பாப்புனையும் நண்பர்!
தமிழ்க்கடலில் நீந்தும் கமலக் குமார்
தமிழை,குறளை நுணுக்கமுடன் பார்த்தே
இமையானார்! நற்றமிழைக் காக்கும் கவிஞர்
தமிழ்போல வாழ்க தழைத்து.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home