Thursday, April 30, 2020


எனது முதல் கவிதை நூல் !

முதல் கவிதை நூல்வெளிவந்தபோது தந்தை இல்லை!

தந்தை இயற்கை எய்திய நாள்.

11.11.1980

வெளியிட்ட ஆண்டு 1981 ஆகத்து மாதம்.

அச்சகம்: பாண்டியன் அச்சகம்,கோச்சடை

எந்தன் கவிதைநூல் அச்சிடும் எண்ணத்தைத்
தந்தையிடம் சொன்னேன்! சரியென்றார்!
பாக்களை
அன்றாடம் தேர்ந்தெடுத்துத் தந்தேன்! திடீரென்று
தந்தை  உடல்நலம் குன்றி இறந்துவிட்டார்!
பல்வேறு சூழ்நிலை மாற்றங்கள்  வாழ்விலே!
தள்ளிவைத்தேன் நூல்தயா ரிப்பு.

மேலே குறிப்பிட்ட ஆண்டில் முதல்கவிதை
நூலை வெளிக்கொணர்ந்தேன்! தந்தையை வாழ்த்துகின்ற
பாவே முதல்பக்கம்! அஞ்சலிப் பாவோ
நூலின்  இறுதிக் கவிதையாய் ஆனது!
நூலைக்  கவிச்சாரல் என்றே பெயரிட்டு
ஆவலுடன் கொண்டுவந்தேன் இங்கு.


நூலின் இறுதியில் உள்ள அஞ்சலிக் கவிதை:

எந்தையை வணங்குதும்!

அற்றைத் திங்கள் அருமைத் தந்தை
சுற்றஞ் சிறக்க சிற்றெறும் பாக
உழைத்தி ருந்தார்! உயர்ந்தி ருந்தார்!
தழைக்கச் செய்தே தருவெனத் திகழ்ந்தார்!
நேர்மைத் திறனும் நியாயப் பண்பும்
ஓருரு வாக உலவி வந்தார்!
குடும்பச் சோலை கண்டது தென்றல்!
தொடுத்தா ரின்பம் தெவிட்ட வில்லை!

இற்றைத் திங்கள் எம்மருந் தந்தை
சுற்றஞ் சிறக்க சிற்றெறும் பாக
உழைத்தா ரன்றே! இன்றோ இலமே!
மழையெனக் கண்ணீர் விழிகளில் பெருகிட
நெஞ்சினில் துன்பம் பெருகு  தம்மா!
எங்கள் தந்தையை எங்கே காண்போம்?
தந்தையை இழந்தே தடுமா றுகின்றோம்!
எங்கள் வாழ்வில் ஏக்கம் படர்ந்ததே!

பாபா
பாபா, தங்கள் தந்தை ஒரு நேர்மையாளர் மற்றும் திறமையானவர் என்றே‌ ஆங்கிலேயரே உங்கள் அன்புத்தந்தையை
அருகில் வைத்து ஆலோசனை கேட்டு பென்னர் நடந்ததை மதுரையே சொல்லும்.
அனேகமாக 1972ல் உங்கள் தந்தை அவராகவே எனது படிப்பின் காரணமாக பென்னரில் வேலைக்கு விண்ணப்பம் தரச் சொன்னார்.இது நடந்த இடம் அரசரடியில். நானும் தாசும் தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார்கள். அவர் யாருக்குமே சிபாரிசு செய்யமாட்டார்.உனக்குதான் ஆச்சரியமாக சொல்லி உள்ளார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் நான் ஆசிரியப் பணியை விரும்பியதால் வழி மாறியது.அரசடியை கடக்கும்போதேல்லாம் நினைவு வரும்

தம்பா
காரைக்குடி

The great soul God Father for many person. My role model and first greetings from my grand father. Thanks for your information guru.

Muthuveeran kumar

0 Comments:

Post a Comment

<< Home