Monday, June 01, 2020

வள்ளுவமே விளக்கு!

வள்ளுவப் பார்வை நடுநிலைப் பார்வைதான்!
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் பார்வைதான்!
வள்ளுவத்தைப் பேசி முரண்பட்டு வாழ்வோரும்
வள்ளுவத்தைப் பேசாமல்  நாளும் உடன்பட்டு
வெள்ளந்தி யாகவே வாழ்வோரும் இங்குண்டு!
வள்ளுவம் ஏற்றாலும் வாழும்! ஏற்காமல்
தள்ளினாலும் என்றும் தலைநிமிர்ந்தே வாழ்ந்திருக்கும்!
வள்ளுவம் வாழ்வின் விளக்கு.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home